Business is booming.

வவுனியாவில் குடும்ப நல வாழ்வு பயிற்சி பட்டறை

0 149

வவுனியா வடக்கு பகுதியில் இயங்கம் WSEEDS-vavuniya வடக்கு (பெண்கள் சமுக பொருளாதார வலுவூட்டல் மற்றும் கல்வி அபிவிருத்தி சங்கம்) அமைப்பின் ஏற்பாட்டில்; நேற்றைய தினமும் இன்றும் (10.09.2022 மற்றும் 11.09.2022) காலை 9.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை “குடும்ப நல வாழ்வு” என்ற தொனிப்பொருளில் பயிற்சி பட்டறை இடம்பெற்றதுடன் இப்பயிற்சியில் வவுனியா வடக்கு பகுதியை சேர்ந்த 07 கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களிலிருந்து 20 பெண்களுக்கு மதுபானம், புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவணை தொடர்பான இரண்டு நாள் பயிற்சி இராமனூர் தெய்வம் முன்பள்ளி வளாகத்தில் இடம்பெற்றது.

இப் பயிற்சிக்கான வளவாளராக றகமா (RAHAMA) நிறுவனத்தின் பயிற்சி இணைப்பாளரான இராமன் சஞ்சியகாந்தி அவர்கள் நடாத்தியிருந்தார்.

இன் நிகழ்வில் புளியங்குளம் கிராம சேவையாளர் மற்றும் RAHAMA  நிறுவன செயலாளர் நாயகம் எம் எப் மரிக்கார் அவர்களும் கலந்துகொண்டு நிலையான மாற்றத்தை எற்படுத்தும் உத்திகள் தொடர்பாகவும் பெண்கள் சங்கங்கள் வலுவாக இருந்தால் தான் பெண்களின் சமூக பொருளாதார மற்றும் சட்ட ரீதியிலான சமூக மாற்றத்தை உருவாக்கமுடியும் அத்துடன் பல விடயங்களை சாதிக்க முடியும் என்ற கருத்தை தெளிவுப்படுத்தியதுடன் மேலும் பெண்கள் சங்கங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும் போன்ற ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மது மற்றும் போதைவஸ்து பாவனை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது அதன் விளைவாக தற்போது சமூக விரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளதுடன் சிறுவர் மீதான துஸ்பிரயோகம், குடும்ப வன்முறை, குடும்ப பிரிவு, பெண்கள் பாலியல் விற்பனைக்கு ஆளாகுதல் போன்ற பல்வேறுபட்ட பிரச்சினைகள் இனங்காணப்பட்டதுடன் கிராம மட்டத்தில் விழிப்புணர்வு மற்றும் நடத்தை ரீதியான மாற்றங்கள் துரித கதியில் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

அத்துடன் ஒவ்வொரு கிராமத்திலும் நடந்த நடக்கின்ற அனுபவ ரீதியாக சமூக மட்ட பிரச்சினைகள் சீரழிவுகள் போன்றன பேசப்பட்டு மேலும் அதற்கு சாதகமான தீர்வுகள் கலந்தாலோசிக்கப்பட்டது. கிராம மட்டங்களில் இருக்கு சமூக மட்ட அமைப்புக்களை ஒன்றினைத்து ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவனமாக உரு மாற்றம் பெற்று மேலும் சாதகமான சட்டங்களுக்குட்பட்ட தீர்வுகள் மற்றும் சமூக மாற்றத்திற்கான அனுகுமுறைகளின் தேவைப்பாடு குறித்து இனக்கப்பாடு எட்டப்பட்டது.

“சமூக மாற்றத்திற்கு அணைவரும் ஒன்றினைவோம்”

Leave A Reply

Your email address will not be published.