Business is booming.

இன்றைய ராசிபலன் 12.09.2022

0 100

  • மேஷம்

    மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். சகோதர வகையில் ஆரோக்யமான விவாதங்கள் வரக்கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளருடன் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். போராடி வெல்லும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனைத்திறன் பெருகும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். முயற்சியால் முன்னேறும் நாள்.

  • கடகம்

    கடகம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணபுழக்கம் கணிசமாக உயரும். நீண்ட நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் முடியும்‌. வெளியூரி
    லிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மனசாட்சிபடி செயல்பட வேண்டிய நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: சந்திராஷ்டமம் இருப்பதால் எதையோ இழந்தது போல ஒருவித கவலைகள் வந்து போகும்.மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில்  லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

  • கன்னி

    கன்னி: புதிய எண்ணங்கள் செயல்வடிவம் பெருகும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

  • துலாம்

    துலாம்: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரி அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். கனவு நனவாகும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: புதிய முயற்சி யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

  • தனுசு

    தனுசு: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வெளியூர் பயணங்களாலும் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு. தாய்வழி உறவினர்களால் மனத்தாங்கல் வந்து நீங்கும். புது வேலை அமையும். உத்தியோகத்தில் அதிரடி செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

  • மகரம்

    மகரம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் சகஊழியர்கள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: உணர்ச்சிப் பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக பேசுவீர்கள் செயல்படுவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.

  • மீனம்

    மீனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள் ஏமாற்றங்களை நினைத்து அவ்வப்போது மனம்கலங்குவீர்கள். உறவினர் நண்பர்
    களில் சிலர் உங்களை  மதிக்காமல் போவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைவார்கள். உத்தியோகத்தில் பிறரின் குறைகளை நாசுக்காக சுட்டிக்காட்டுங்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

Leave A Reply

Your email address will not be published.