Business is booming.

ஊடக அமையத்தின் முயற்சி போலி கோதுமை மா விற்பனையாளர் மீது நடவடிக்கை!

0 69

வவுனியா ஊடக அமையத்தின் முறைப்பாட்டையடுத்து பாவனையாளர் அதிகார சபையால் கோதுமை மா விநியோகத்தருக்கு எதிராக வழக்கு தாக்கல்

வவுனியா ஊடக அமையத்தின் முறைப்பாட்டுக்கு அமைவாக போலியான முகவரி மற்றும் நிலையான தொலைபேசி இலக்கமின்றி வவுனியா வர்த்தக நிலையங்களில் பொதி செய்யப்பட்ட கோதுமை மாவினை விநியோகித்த  முகவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பாவனையாளர் அதிகார சபையினர் இன்று (27.10) தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைவாக மக்கள் நலன்கருதி வவுனியா ஊடக அமையத்தால் கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா பாவனையாளர் அதிகார சபை மற்றும் மாவட்ட அரச அதிபர் ஆகியோரிடம் முறைப்பாடு செய்யபபட்டது.

பதிவு எதுவும் செய்யப்படாத போலியான பெயர் மற்றும் நிரந்தர தொலைபேசி இலக்கமின்றி, எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் வேலை செய்யும் ஒருவரின் கைத்தொலைபேசி இலக்கத்துடன் கோதுமை மா பொதி செய்யப்பட்டு வவுனியா வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தமையுடன், உணவுப் பொருளை இவ்வாறு போலியான முகவரியுடன் விற்பனை செய்வதால் அதன் மூலம் ஏதாவது பாதிப்புக்கள் ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு எனவும் பொது மக்கள் கேள்வி எழுப்பிய நிலையில், வவுனியா ஊடக அமையத்தால் முறைப்பாடு செய்யப்பட்டது.

ஊடக அமையத்தின் முறைப்பாட்டிற்கமைய விசாரணைகனை முன்னெடுத்த வவுனியா மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினர் குறித்த கோதுமை மா பொதிகளை வர்த்தக நிலையங்களில் இருந்து பெற்று அதனை வர்த்தக நிலையங்களுக்கு விநியோகித்த முகவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.