Business is booming.

வவுனியா மாணவிகள் சாதனை!

0 329

தேசிய குத்துச்சண்டை போட்டியில் வவுனியா திருஞானசம்பந்தர் வித்தியாலயத்திற்கு இரண்டு தங்கம்

பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட குத்துச்சண்டை போட்டியில் வவுனியா சிறீராமபுரம் திருஞானசம்பந்தர் வித்தியாலயம் இரண்டு தங்க பதக்கங்களை வென்றுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான கல்வியமைச்சினால் நடத்தப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட குத்துச்சண்டை போட்டி இம்மாதம் 21,22,23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நாவலப்பிட்டிய ஜெயதிலக விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

இப்போட்டியில் வவுனியா சிறீராமபுரம் திருஞானசம்பந்தர் வித்தியாலயம் சார்பாக பங்குபற்றிய மாணவிகளான எல்.கஜேந்தினி 57 கிலோகிராம் எடைப் பிரிவில் தங்கப்பதக்கத்தை சுவீகரித்துள்ளதுடன், 60 கிலோகிராம் எடைப் பிரிவில் யூ.கீர்த்தனாவும் தங்கப்பதக்கத்தை பெற்று பாடசாலைக்கும், வலயத்திற்கும், மாகாணத்திற்கும், கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

மாணவர்களின் சாதனையையும் அவர்களின் வெற்றிக்கு காரணமாயிருந்த உடற்கல்வி ஆசிரியர் கே.நிரஞ்சன், பயிற்றுவிப்பாளர் எஸ்.நிக்சன் ஆகியோருக்கு பாடசாலை சமூகம் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.