Business is booming.

இன்றைய ராசிபலன் 05.11.2022

0 74

இன்றைய ராசிபலன்

  • மேஷம்

    மேஷம்: எதிர்பார்த்த வேலை தாமதமாக முடியும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: சமயோஜித புத்தியால் எல்லாப் பிரச்சினைகளையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில்  பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு பாராட்டு கிடைக்கும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

  • கடகம்

    கடகம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். சகோதர வகையில் உதவிகள் உண்டு. நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். தடைகள் உடைபடும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை  நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

  • கன்னி

    கன்னி: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் உதவிகள் உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனைவி வழி உறவினர்கள் முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் மதிப்புக் கூடும். திறமைகள் வெளிப்படும் நாள்.

  • துலாம்

    துலாம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரியிடம் ராஜ தந்திரத்தை உடைப்பீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளரின் ரசனையை புரிந்து கொள்வீர்கள். புதிய உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். புதுமை படைக்கும் நாள்.

  • தனுசு

    தனுசு: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். உழைப்பால் உயரும் நாள்.

  • மகரம்

    மகரம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தைரியமான முடிவுகள் எடுக்கும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். அழகும் இளமையும் கூடும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரி ஒத்துழைப்பார். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

  • மீனம்

    மீனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பல வேலைகளையும் இழுத்துப்போட்டு பார்க்க வேண்டி வரும். சாதாரணமாக பேசுவதை கூட சிலர் தவறாகப் புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பால் லாபம் குறையும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

Leave A Reply

Your email address will not be published.