Business is booming.

வவுனியாவில் விபத்து 3வர் பலி- 16 பேர் படுகாயம்!

0 632

வவுனியாவில் பாரிய விபத்து – மூவர் உயிரிழப்பு – 16 பேர் படுகாயம்

வவுனியா நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

இரவு 12.15 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி  சென்ற அதி சொகுசு பேருந்து வேக கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளானது

இதன்போது பேருந்தின் சாரதி மற்றும் ஒரு பெண் உட்பட மூவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளனர்.

இதேவேளை குறித்த பேருந்தில் பயணித்த 16 பேர் காயமடைந்த நிலையில் நால்வர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்து ஏற்பட்ட சமயம் அதே திசையில் பயணித்த மற்றுமொரு சொகுசு பேருந்தின் சாரதி தனது பேருந்தை விபத்தில் இருந்து தடுப்பதற்காக வீதியின் ஒரமாக செலுத்தி மற்றுமொரு பாரிய விபத்தை தவிர்த்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா மற்றும் ஓமந்தை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


Leave A Reply

Your email address will not be published.