Business is booming.

வவுனியாவில் மீண்டும் ஒரு பேருந்து விபத்து!

0 1,313
வவுனியாவில் இரு சொகுசு பேருந்துகள் விபத்துக்குள்ளான நிலையில் மேலும் ஒர் அதிசொகுசு பேருந்தும் விபத்து
வவுனியா ஏ9 வீதியில் வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்திற்கு அண்மித்த பகுதியில் சொகுசு பேருந்து இன்று (05.11.2022) நள்ளிரவு 12.20 மணியளவில் வீதியினை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் இன்று (05.11.2022) நள்ளிரவு 12.00 மணியளவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் சிக்கி சாரதி உட்பட மூவர் உயிரிழந்ததுடன் பேருந்தில் பயணித்த 16 பேர் காயமடைந்து உள்ளனர் அதிலும் நால்வர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதுடன் இவ் விபத்து ஏற்பட்ட சமயம் அதே திசையில் பயணித்த மற்றுமொரு சொகுசு பேருந்து சாரதி தனது பேருந்தை விபத்து ஏற்படுவதை தவிர்க்கும் முகமாக வீதியின் ஒரமாக செலுத்தியிருந்தமையுடன் பேருந்து சிறு சேதங்களுக்குள்ளாகியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் ஏ9 வீதியில் வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்திற்கு அண்மித்த பகுதியில் வீதியில் தரித்து நின்ற பேருந்தினை முந்திச்செல்ல முற்பட்ட மற்றோரு சொகுசு பேருந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது தெய்வாதீனமாக எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை
மாவட்டத்தில் இன்றைய தினத்தில் மாத்திரம் 3 சொகுசு பேருந்துகள் விபத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave A Reply

Your email address will not be published.