Business is booming.

பிரபல நடிகை தற்கொலை – கிடைத்த கடிதம்

0 12

பிரபல சீரியல் நடிகை ரஷ்மிரேகா ஓஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் அடுத்த நயபள்ளி கட்சாஹியில் உள்ள வாடகை வீட்டில் டிவி சீரியல் நடிகை ரஷ்மிரேகா ஓஜா என்பவர் வசித்து வந்தார். அவர் நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வீட்டு உரிமையாளர் அளித்த தகவலின் பேரில் பொலிசார் ரஷ்மிரேகா ஓஜாவின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும், வீட்டில் இருந்து இரண்டு துப்பாக்கி, ஒரு கத்தி மற்றும் வெடிமருந்துகளை கைப்பற்றினர்.

 

இதோடு அங்கிருந்த தற்கொலைக் குறிப்பு கடிதத்தையும் கைப்பற்றினர். அதில் ஓஜா யாருடைய நிர்பந்தத்திலும் தான் சாகவில்லை என்று எழுதி வைத்துள்ளதாக தெரிகிறது.

பிரேத பரிசோதனைக்கு பிறகே அவரது மர்ம மரணத்திற்கான காரணம் தெரியவரும். திர்டோல் பகுதியைச் சேர்ந்த ரஷ்மிரேகா, தனது ஆண் நண்பருடன் கடந்த ஒன்றரை மாதங்களாக வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

தற்போது ஆண் நண்பர் வெளியூரில் இருப்பதாக கூறப்படுகிறது. ராஷ்மிரேகாவின் குடும்பத்தினர் அவர் மரணம் தொடர்பில் எந்தக் குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை.

அவரது பிரேத பரிசோதனை அறிக்கையைப் பெற்ற பிறகே கூடுதல் விவரங்களை அறிய முடியும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.