Business is booming.

இன்றைய ராசிபலன் 23.06.2022

0 67

  • மேஷம்

    மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். யாரும் உங்களை புரிந்து  கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பொறுமை தேவைப்படும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது நல்லது. உடல்நலம் பாதிக்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள்.  உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். புகழ் கௌரவம் கூடும் நாள்.

  • கடகம்

    கடகம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உறவினர் நண்பர்களால் அனுகூலம் உண்டு. பிரியமானவர்களுக்காக சில வற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: குடும்பத்தில் உள்ளவர் களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். கைமாற்றாக வாங்கி யிருந்த பணத்தை திருப்பித்தருவீர்கள். நட்பு வட்டம் விரியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப் பார்கள். நிம்மதி கிட்டும் நாள்.

  • கன்னி

    கன்னி: சந்திராஷ்டமம் இருப்பதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள்.  உத்தியோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்து கொள்ளுங்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

  • துலாம்

    துலாம்: ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். மனைவி வழி உறவினர்களால் ஆதரவுக் கிட்டும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப் படும். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வீடு வாங்குவது குறித்து யோசிப் பீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அமோகமான நாள்.

  • தனுசு

    தனுசு: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். உங்களைச் சுற்றி நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதுமை படைக்கும் நாள்.

  • மகரம்

    மகரம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: குடும்பத்தில் உள்ளவர்களை கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். வாகன வசதிப் பெருகும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.

  • மீனம்

    மீனம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் வாய்ப்புகள் தேடி வரும். மனசாட்சிபடி செயல்படும் நாள்.

Leave A Reply

Your email address will not be published.