வவுனியா நகரில் மாணவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வீதி-(காணொளி)
வவுனியா நகரில் மாணவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வீதி-(காணொளி)
வவுனியா கடவுச்சீட்டு (குடிவரவு, குடியகழ்வு) காரியலயம் முன் நெரிசல் – அவதியுறும் மாணவர்கள்
வவுனியா வெளிவட்ட வீதியில் உள்ள கடவுச்சீட்டு காரியாலயம் முன்பு காலை நேரங்களில் குறப்பாக பாடசாலை நேரத்தில் குறித்த பகுதியூடாக பயணிக்க முடியாத சூழ்நிலை காணப்படுகிறது
காலைவேளைகளிலேயே மக்கள் கூட்டமாக நிற்பதுடன் வீதியின் இரு பகுதிகளிலும் வாகனங்களை கூட நிறுத்தி வைத்துள்ளனர் இதனை காரியாலயத்தின் காவலாளிகள் கவணத்திற்கு கொண்டு சென்றும் சீரான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை
பலநூற்றுக்கணக்கான மாணவர்கள் இவ்வீதியினூடாகவே பாடசாலைக்கு சென்றுவருகின்றனர் சனநெரிசல் அதிகமாக உள்ளதால் விபத்துக்கள் அதிகம் இடம்பெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
இது தொடர்பாக எமது செய்திபிரிவினர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் தலமை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி மேலும் நகரசபை தவிசாளரிடமும் முறையிட்டுள்ளனர் தொடர்ந்தும் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்