Business is booming.

வவுனியா மின்சாரசபை ஊழியர்களால் குழப்பம் என முறைப்பாடு!

0 316

வவுனியா – ஓமந்தையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 5000 ரூபாவுக்கு பெட்ரோல் வழங்காவிட்டால் தடைப்பட்ட மின்சாரம் வராது என மின்சாரசபை ஊழியர்கள் அச்சுறுத்தியதாக எரிபொருளை பெற வந்தவர்கள் பொலிஸில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.

வவுனியா ஓமந்தையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று பெட்ரோல் வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது புளியங்குளம் பகுதியில் எரிபொருளுக்காக காத்திருந்த மின்சாரசபை ஊழியர்கள் அங்கு எரிபொருள் வழங்கப்படாமையால் ஓமந்தை எரிபொருள் நிலையத்திற்கு சென்றிருந்தனர்.

நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிலையங்களில் இடம்பெறும் மோசடி: மக்கள் குற்றச்சாட்டு (Photos) | Fraud At Fuel Stations Nationwide

இதன்போது 2500 ரூபாவுக்கு எரிபொருள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தமக்கு 5000 ரூபாவுக்கு வழங்கப்பட வேண்டும் என மின்சாரசபை ஊழியர்கள் தெரிவித்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த நேரத்தில் தடைப்பட்டிருந்த மின்சாரத்தினை வழங்க முடியாது எனவும், குழப்பத்தில் ஈடுபட்டுள்ளதுடன்,பின்னர் மின்சாரம் வழங்கப்பட்டதினையடுத்து மின்சாரசபை ஊழியர்களுக்கு 2500 ரூபாவுக்கே பெட்ரோல் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

செய்தி பிரதி தமிழ்வின்

Leave A Reply

Your email address will not be published.