04.09.2022 அன்று நடைபெற்ற யாழ் கிறிஸ்தவ ஒன்றியத்தின் நிறைவேற்றுக்குழுவின் தீர்மானத்தின்படி, ‘வாழ்வுரிமையை பாதுகாப்போம்’ எனும் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.
இறையாட்சிப்பணியின் காத்திரமான முன்னேற்றத்துக்காக இதனை உங்களுடன் பகிர்கிறோம்.
இறையாட்சிப்பணியில்
திருவருட்பணி S.D.P.செல்வன்
தலைவர்
யாழ் கிறிஸ்தவ ஒன்றியம்
வாழ்வுரிமையை பாதுகாப்போம் – யாழ் கிறிஸ்தவ ஒன்றியத்தின் அறிக்கை
மக்களின் வாழ்வுரிமையை பாதிக்கும் நடவடிக்கைகள், இலங்கையின் புதிய ஜனாதிபதி அவர்களின் ஆட்சியில் தொடருகினறன,இது எமக்கு பாரிய கவலையை ஏற்படுத்தி வருகிறது, முக்கியமாக அமைதி வழி போராட்டக்காரருக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள நிலை, சமய விழுமியங்கள் மதிக்கப்படாமையை வெளிப்படுத்துகிறது.
கடந்த 22 ஜூலை 2022 அன்று கொழும்பிலுள்ள போராட்டமுகாம்மீதான மிருகத்தனமான தாக்குதல் மற்றும் கைதுகள் ,மிரட்டல்கள், உட்பட தற்போதும் இந்த அமைதி வழி போராட்டக்காரருக்கு எதிராக தொடரும் மர்மக்கொலை, வன்முறை மற்றும் அடக்குமுறைகளை நாம் கணடிக்கின்றோம்,
அத்துடன் ஊடகவியலாளர்களுடைய கடமை முன்னெடுப்புகள் அச்சுறுத்தப்பட்டமையையும் கண்டிக்கின்றோம்.
கிறிஸ்து இயேசு முன்வைத்த உண்மை,நீதி,அமைதி,சமத்துவம், சகோதரத்துவம்… போன்ற இறையாட்சியின் விழுமியங்கள் அமைய வாழ்வுரிமையை வலியுறுத்துகிறோம், இறையாட்சியின் விழுமியங்களை வலியுறுத்தும் நாம் அமைதி வழி போராட்டக்காரருக்கு எதிரான அடக்குமுறைகள் மற்றும் கைதுகளை கண்டிக்காமல் இருக்க முடியாது,
இலங்கையில், அமைதி வழியில், நல்ல மாற்றத்தை எதிர்நோக்கி, முன்னெடுக்கப்பட்ட போராட்டக்காரர்களின் முயற்சி, மக்களுடைய ஆதரவுடனும் பங்கேற்புடனும் முன்னேற்றமடைந்தமை வரலாறு, இதனால் ஆட்சிபீட மாற்றங்கள் ஏற்பட்டமையும் வரலாறு, இவர்களுக்கு கிடைத்த அங்கீகரிப்பு உள்நாட்டில் மட்டுமல்ல சர்வதேச ரதீயிலும் முக்கியத்துவப்படுத்தப்பட்டமை குறிப்பித்தக்கது.
மனித மாண்புக்கு ஒவ்வாத பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகாலச்சட்டம் என்பவை பிரயோகிக்கப்பட்டு, ‘உணர்வு, நீதி, அமைதி பன்மைத்துவம் மற்றும் நல்லிணக்கம் அச்சுறுத்தப்பட்டமை வடக்கு கிழக்கு தமிழர்கள் உட்பட அனைவரதும் அனுபவம்.
இதனையே இன்றும் அமைதி வழி போராட்டக்காரர் மீதும் திணித்துள்ளமை தொடரும் ஒடுக்குமுறை. இதனை உடனடியாக நிறுத்தும்படி புதிய ஜனாதிபதியையும் அரசையும் யாழ் கிறிஸ்தவ ஒன்றியம் கோருகின்றது.
அமைதி வழி போராட்டக்காரருடன் அரசு உடனடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடவேணடும். கைதுசெய்யப்பட்டவர்களை, காலம் தாழ்த்தாது, உடனடியாக, அரசு விடுதலை செய்ய வேண்டும்.
நாம் இன்று எதிர்கொள்ளும் அரசியல் பொருளாதார சரிவு காரணமாக, முக்கியமாக ஏழைகள், பல இன்னல்களை அன்றாடம் எதிர்கொளளும் அவலநிலை காணப்படுகிறது, ஒரு ஸ்திரமான அரசை நிறுவி உள்நாட்டு உற்பத்தியை முன்னுரிமைப்படுத்தல், அந்நியசெலாவணியை பெறுவதற்கான முயற்சிகள்,பேண்தகுபொருளாதார அபிவிருத்திக்கான உளள்க கட்டமைப்பை மேம்படுத்தல் போன்ற விடயங்களில் அதிக கவனம் செலுத்துதல் அவசரமான தேவை.
முக்கியமாக அமைதி வழி போராட்டக்காரர்களின் ஜனநாயக உரிமைகள் மதிக்கப்பட வேணடும். அரசியல் பொருளாதார வாழ்வுரிமையை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைவது அவசியம் என நாம் வலியுறுத்துகிறோம்.
போர், சுனாமி மற்றும் பேரழிவுகள் மத்தியில் மக்களின் வாழ்வை உறுதி செய்ய பல முயற்சிகளை முன்னெடுத்த யாழ் கிறிஸத்வ ஒன்றியம் தற்போது வாழ்வுரிமையை பாதுகாகக் அனைவரும், வேறுபாடுகளையும் வரையறைகளையும் கடந்து, இயலுமைக்கேற்ப செயற்படவேணடும் என வலியுறுத்துகிறது.
“உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்” (யோவான் 8:32)
யாழ் கிறிஸ்தவ ஒன்றியம்.
யாழ்ப்பாணம். 05.09.2022.