வவுனியாவில் பல வருடகாலமாக குடிநீருக்காகவும் அத்தியாவசிய தேவைக்காகவும் போராடிக்கொண்டிருக்கிறது ஒரு கிராமம்
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
வவுனியா நகரிலிருந்து சுமார் 5 தொடக்கம் 8கிலோ மீற்றர் எல்லைக்கு உட்பட்ட கிராமமே மகாறம்பைக்குளம் எனும் கிராமம் இங்கு மகாறம்பைக்குளம் மேற்கு பகுதியில் ஶ்ரீ முத்துமாரியம்மன் கோவில் வீதியில் உள்ள மக்கள் குறிப்பாக எல்லாளன் சனசமூக நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 150ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல வருட காலமாக குடிநீருக்காகவும் அத்தியாவசிய தேவைக்காகவும் போராடி வருகின்றனர் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது
இது தொடர்பாக அக்கிராமத்தை சேர்ந்த சனசமூக நிலையத்தினர் தெரிவிக்கையில்
இப்பகுதியில் 150ற் கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றனர் எனினும் குறித்த குடும்பங்களுக்கு குடிநீர் பிரச்சினை நிலவி வருவதாகவும் பல வருடகாலமாக பல திணைக்களங்களுக்கும் , அரசியல்வாதிகளிடமும் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு பலனும் கிட்டவில்லை இங்கு வாழும் பாடசாலை மாணவர்கள் கூட காலை வேளையில் பாடசாலை செல்வதற்கான வசதிகள் கூட இல்லை என்றும் பேருந்து சேவைகள் கூட சீராக இல்லை என்றும் தெரிவிப்பதுடன்
இதனால் பாடசாலை மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியவில்லை என்பதுடன் அன்றாட கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் கூட சரியான நேர காலத்திற்கு பணிக்கு செல்லமுடியாமல் தவிக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளனர்
எனவே இது தொடர்பான உரிய அதிகாரிகள், அரசியல்வாதிகள் தமது கிராமத்திற்கு வந்து நேரடியாக எமது துயரங்களை கண்டறிந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் என்பதுடன் இந்திய திரைப்படங்களில் வரும் தொலைந்து போன அத்துப்பட்டி கிராமமாகவா எங்களையும் அதிகாரிகள் நினைத்து வருகின்றனர் என்றும் விசனம் தெரிவித்துள்ளனர்